பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் பதவியேற்பு : முதல்வர்களுக்கு மீண்டும் வாய்ப்பு எஸ்.பி.எஸ்., நகர்:உ.பி.,யில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில், கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்துக்கும், மணிப்பூரில் முதல்வர் பீரேன் சிங்கிற்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்க, பா.ஜ., தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதை உறுதிப்படுத்தும் விதமாக, பிரதமர் நரேந்திர மோடியை அவர்கள் இருவரும் டில்லியில் சந்தித்து பேசினர் சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய நான்கு மாநிலங்களில் பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. பஞ்சாப் மாநிலத்தின் 17வது முதல்வராக, ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான் பதவியேற்றார். பஞ்சாபில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 117 இடங்களில் அக்கட்சி 92 இடங்களை கைப்பற்றியது. துரி தொகுதியில் வெற்றி பெற்ற பகவந்த் மான், 48, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்களால் சட்டசபை குழு தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் லோக்ச...