பகீர்! இளம் பெண்ணை உயிரோடு தீ வைத்து எரித்து, வீடியோ எடுத்து ரசித்த 3 பேர்!125889076
பகீர்! இளம் பெண்ணை உயிரோடு தீ வைத்து எரித்து, வீடியோ எடுத்து ரசித்த 3 பேர்! பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை, உயிரோடு தீ வைத்துக் எரித்துக் கொன்ற சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை எழுப்பி உள்ளது. ஆண்டாண்டு காலமாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர் இந்தியாவில் பல்வேறு வகைகளில் ஒடுக்கப்பட்டு வரும் சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் இது போன்ற சம்பவங்கள் நடந்து விடுவது பேரதிர்ச்சியை அளித்து விடுகிறது. அரசு வகுத்துள்ள திட்டத்தின் மூலம் மத்தியப் பிரதேசத்தில் ஒரு பழங்குடியின குடும்பத்திற்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த குடும்பத்தைச் சேர்ந்த 38 வயது பெண் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலத்தை சமூக விரோதிகள் 3 பேர் ஆக்கிரமித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து ராம்பியாரி சஹாரியா அவர்களிடம் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஆக்கிரமிப்பாளர்கள் 3 பேரும் சேர்ந்து, ராம்பியாரி சஹாரியாவை அவரது வயலில் வைத்து தீயிட்டு கொளுத்தி இருக்கிறார்கள். வலி தாங்க முடியாத அந்த ப...