626 காலி பணியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு!
626 காலி பணியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு! ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய 626 பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் மூலம் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 போன்ற பணியிடங்களுக்கு தேர்வு மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இது அல்லாமல் கூடுதலாக பொறியாளர், குழந்தை பாதுகாப்பு அதிகாரி போன்ற பணியிடங்களுக்கும் டிஎன்பிஎஸ்சி மூலம் அதிகாரிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்தவகையில், ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய 626 காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. காலி பணியிடங்களின் விவரம்: தானியங்கிப் பொறியாளர்(மோட்டார் வாகன பராமரிப்புத் துறை) - 04 ஊதியம்: மாதம் ரூ.56,100 - 2,05,700 இளநிலை மின் ஆய்வாளர் - 08, உதவி பொறியாளர்(வேளாண்மை பொறியியல்) - 66, உதவி பொறியாளர்(நெடுஞ்சாலைத் துறை) - 33, இயக்குநர்(தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை) - 18 உதவி பெ...