மகாபாரத நாடக இயக்குனர் மரணம்!! பிரபலங்கள் இரங்கல்!!1840122497
மகாபாரத நாடக இயக்குனர் மரணம்!! பிரபலங்கள் இரங்கல்!! பிரபல நாடக இயக்குநரான பீட்டர் புரூக் லண்டனில் காலமானார். அவருக்கு வயது 97.20-ம் நூற்றாண்டின் மிகவும் திறமையான நாடக இயக்குநர்களில் ஒருவரான பீட்டர் புரூக், தனது நடிப்பால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். இவர் 1963-ம் ஆண்டு லார்ட் ஆஃப் தி ஃப்ளைஸ் மேடை நாடகத்திற்கு மக்களிடையே பிரபலமானார். அதன்பின், 1966-ல் பீட்டர் வெய்ஸின் ‘மராட்/சேட்’ மற்றும் 1970-ல் வில்லியம் ஷேக்ஸ்பியரின் ‘எ மிட்சம்மர் நைட்ஸ் ட்ரீம்’ அரங்கேற்றத்திற்காக சிறந்த இயக்கத்திற்கான டோனி விருதைப் பெற்றார்.1970ம் ஆண்டில் அவர் பாரிஸில் தங்கியிருந்தபோது, நாடக ஆராய்ச்சிக்கான சர்வதேச மையத்தை நிறுவினார். நாடகத்துறையில் மிகவும் செல்வாக்குமிக்க நூல்களில் ஒன்றான 'தி எம்ப்டி ஸ்பேஸ்' என்ற நூலை எழுதினார். கடந்த 1985-ம் ஆண்டு அவர் 9 மணி நேரம் ஓடக்கூடிய மகாபாரத இதிகாசத்தை இயக்கினார். லண்டனில் உள்ள யூத விஞ்ஞானிகளின் குடும்பத்தில் மார்ச் 21, 1925-ம் ஆண்டு பிறந்த பீட்டர் புரூக், 1970-ம் ஆண்டு வாக்கில், பாரிஸுக்குச் சென்று பல நாடகங்களை இயக்கினார். மீண்ட...