பிஎப் வட்டி விகிதத்தை குறைப்பது ஏற்கத்தக்கதல்ல! மறுபரிசீலனை செய்ய ஒன்றிய அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்
பிஎப் வட்டி விகிதத்தை குறைப்பது ஏற்கத்தக்கதல்ல! மறுபரிசீலனை செய்ய ஒன்றிய அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல் சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை: அரசின் வருவாயைப் பெருக்கவும், செலவுகளை குறைக்கவும், சிக்கனத்தை கடைபிடிக்கவும் பல வழிகள் இருக்கின்ற நிலையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை குறைப்பது ஏற்கத்தக்கதல்ல. இதன்மூலம் பாதிக்கப்படுபவர்கள் 6 கோடியே 40 லட்சம் ஏழை, எளிய தொழிலாளர்கள். எனவே, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிக் குறைப்பினை மறுபரிசீலனை செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய அரசைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.