பிஎப் வட்டி விகிதத்தை குறைப்பது ஏற்கத்தக்கதல்ல! மறுபரிசீலனை செய்ய ஒன்றிய அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்


பிஎப் வட்டி விகிதத்தை குறைப்பது ஏற்கத்தக்கதல்ல! மறுபரிசீலனை செய்ய ஒன்றிய அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்


சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை: அரசின் வருவாயைப் பெருக்கவும், செலவுகளை குறைக்கவும், சிக்கனத்தை கடைபிடிக்கவும் பல வழிகள் இருக்கின்ற நிலையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை குறைப்பது ஏற்கத்தக்கதல்ல. இதன்மூலம் பாதிக்கப்படுபவர்கள் 6 கோடியே 40 லட்சம் ஏழை, எளிய தொழிலாளர்கள். எனவே, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிக் குறைப்பினை மறுபரிசீலனை செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய அரசைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

 

Comments

Popular posts from this blog

‘இந்திய அணி கேப்டன் பதவி’…ரோஹித்துக்கு கல்தா? தோனியின் ஜெராக்ஸிற்கு அழைப்பு!

FRESCA Target #Fresca