‘இந்திய அணி கேப்டன் பதவி’…ரோஹித்துக்கு கல்தா? தோனியின் ஜெராக்ஸிற்கு அழைப்பு!
‘இந்திய அணி கேப்டன் பதவி’…ரோஹித்துக்கு கல்தா? தோனியின் ஜெராக்ஸிற்கு அழைப்பு!
அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தொடர்ந்து சொதப்பி, 7 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 9ஆவது இடத்தில் நீடித்து வருகிறது. நிலைமை இப்படியிருக்க புது அணிகளான குஜராத் டைடன்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிகள் பட்டையை கிளப்பி வருகின்றன. மேலும் கடந்த சீசன்களில் பிளே ஆஃப் செல்வதையே சாதனையாக வைத்திருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அபாரமாக செயல்பட்டு வருகிறது.
இப்படி பல அதிரடி திருப்பங்கள் ஐபிஎலில் நடைபெற்று வருவதால், இந்திய அணியில் கணிக்க முடியாத அளவுக்கு பல மாற்றங்கள் இனி நிகழும் எனக் கருதப்படுகிறது. இதுகுறித்து நேற்றைய பிசிசிஐ நிர்வாகிகள் கூட்டத்தில் பேசப்பட்டிருக்கிறது.
பிசிசிஐ மீட்டிங்:
அப்போது, முதலில் ஐபிஎலில் கொரோனா பரவாமல் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, ஐபிஎல் நிர்வாகம் தாக்கல் செய்த அறிக்கை குறித்து விவாதித்திருக்கிறார்கள். அதன்பிறகு அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் துவங்கவுள்ள டி20 உலகக் கோப்பை குறித்துப் பேசப்பட்டிருக்கிறது.
ரோஹித் விவகாரம்:
இந்திய அணி ஏற்கனவே கடந்த டி20 உலகக் கோப்பையில் படுமட்டமாக விளையாடி, அரையிறுதிகூட செல்லாமல் தோற்றது. இதற்கு காரணம், கேப்டன் விராட் கோலியின் பார்ம் அவுட்தான். இதனால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக அணியையும் இவரால் சிறப்பாக வழிநடத்த முடியவில்லை. தற்போது ஐபிஎலிலும் ரோஹித் ஷர்மா பார்ம் அவுட் காரணமாக அணியை சொதப்பலாக வழிநடத்தி வருகிறார்.
புது கேப்டன் கோரிக்கை:
இதனால், அக்டோபரில் துவங்கவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு முன்பு புது கேப்டனை நியமிக்க, பிசிசிஐ நிர்வாகிகள் முடிவு செய்திருக்கிறார்கள். சொல்லி வைத்தார்போல் நேற்றைய ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் ஒன்றுபட்டு இதனை பேசியிருக்கிறார்கள். மேலும், டி20 அணிக்கு ரோஹித்திற்கு பதிலாக சஞ்சு சாம்சனை கேப்டனாக நியமிக்க வேண்டும் என பெரும்பாலான நிர்வாகிகள் கூறியிருக்கிறார்கள்.
தோனியின் ஜெராக்ஸ்:
இதற்கு காரணம், ராஜஸ்தான் அணி கடந்த சில சீசன்களில் படுமட்டமாக சொதப்பிய போதும்கூட, தோனி ஸ்டெய்லில் கூலாக இருந்து அணியை வழிநடத்தியிருந்தார். மேலும், பேட்டிங்கிலும் எந்த குறையும் இல்லாமல்தான் இருந்தது. இப்படி அணி சொதப்பியபோது கூட கூலாக பேட்டிங், கேப்டன்ஸியும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். தற்போது ராஜஸ்தான் அதிரடி காட்டும்போதும் கூலாக, நிதானமாக விளையாடி வருகிறார். அனைத்து நேரங்களிலும் தோனியைப் போல கூலாக இருப்பதால்தான், பிசிசிஐ நிர்வாகிகள் சாம்சன் பெயரை பரிந்துரைத்திருப்பதாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், ஐபிஎல் முடிந்த பிறகு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ரோஹித் செயல்படுவதை வைத்து, அதன்பிறகு முடிவு எடுத்துக்கொள்ளலாம் என இறுதியில் முடிவு செய்திருக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
Comments
Post a Comment