ஶ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து இன்று மாலை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்! 1164120626
ஶ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து இன்று மாலை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்! ஹரிகோட்டா: ஆந்திராவின் ஶ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் விண்ணில் பாய உள்ளது. பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 25 மணிநேர கவுண்ட்டவுன் நேற்று மாலை தொடங்கியது. இதனையடுத்து இன்று மாலை 6 மணிக்கு திட்டமிட்டபடி பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் விண்ணில் பாய இருக்கிறது. பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டில் சிங்கப்பூரின் எலக்ட்ரோ ஆப்டிக் செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது. இது பூமியை கண்காணிக்கும் செயற்கைக் கோளாகும். கடல்சார் பாதுகாப்பு, எண்ணெய் கசிவுகள் கண்டறிதலில் இந்த செயற்கை கோள்களின் பங்களிப்பு முக்கியமானது. மேலும் சிங்கப்பூரின் என்இயு சாட், கொரியாவின் ஸ்கூப்-1 ஆகிய செயற்கைக் கோள்களும் இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்டு ஏவப்பட உள்ளது. இன்று விண்ணில் பாய்வது பி.எஸ்.எல்.வி. ரகத்தில் 55-வது ராக்கெட்; ஶ்ரீஹரிகோட்டாவின் 2-வது ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் பி.எஸ்.எல்.வி. தொகுப்பில் 16-வது ராக்கெட் இது. பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் விண்ணில் பாய்வ...