Series against South Africa - Indian team announcement-1759451419
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் - இந்திய அணி அறிவிப்பு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வரவிருக்கும் தென் ஆப்பிரிக்க அணி ஜூன் 9ஆம் தேதி டெல்லியில் நடக்கும் முதல் போட்டியில் விளையாடவிருக்கிறது. இந்தத் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான கேப்டன் ரோகித் ஷர்மா, விராட் கோலி, கே.எல். ராகுல், ரிஷப் பண்ட், பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படவிருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கு இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கே.எல். ராகுல் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் அதிவேகமாக பந்துவீசக்கூடிய உம்ரான் மாலிக் இந்திய அணிக்கு முதல்முறையாக தேர்வாகியுள்ளார். மேலும் தினேஷ் கார்த்திக்கும் மீண்டும் அணிக்குள் வந்திருக்கிறார். இந்திய அணி விவரம்: டெஸ்ட் அணி - ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (விசி), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, சேதேஷ்வர் புஜாரா, ரிஷப் பண்ட் (வி.கே.), கே.எஸ்.பாரத் (வி.கே.), ஆர்.ஜடேஜா, ஆர்.அஷ்வின், ஷர்துல் தாக்கூர். , முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், உமேஷ் ...