Posts

Showing posts with the label #SK20

ஹாட்ரிக் ஹிட் கொடுக்க ரெடியான சிவகார்த்திகேயன்!! SK 20 படத்தின் ரிலீஸ் தேதி வந்தாச்சு!!1283597662

Image
ஹாட்ரிக் ஹிட் கொடுக்க ரெடியான சிவகார்த்திகேயன்!! SK 20 படத்தின் ரிலீஸ் தேதி வந்தாச்சு!! கார்த்தி நடித்த விருமன் படத்துக்கு போட்டியாக சிவகார்த்திகேயனின் எஸ்.கே.20 படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே 13-ந் தேதி வெளியான டான் படம், ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸிலும் 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டாக்டர், டான் ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்ததால் அவர் நடிக்கும் அடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் தற்போது எஸ்.கே.20 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்குகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா நடித்து வருகிறார். மேலும் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது....