நீட் தேர்வு கட் ஆப் மார்க் குறைப்பு… மருத்துவ மாணவர்கள் ஹேப்பி!


நீட் தேர்வு கட் ஆப் மார்க் குறைப்பு… மருத்துவ மாணவர்கள் ஹேப்பி!


புதுச்சேரிமாநிலத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.எஸ்(MS), எம்.டி(MD) போன்ற முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் சென்டாக்(Centralized Admission Committee) மூலம் நிரப்பபட்டு வருகிறது.

ஏற்கெனவே 2 கட்ட கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கைக்கான பட்டியல் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், இடம்பெற்றுள்ள மாணவர்கள் கடந்த 12-ம் தேதிக்கு முன்பே கல்லூரிகளில் சேர்ந்துவிட்டனர்.

இந்தநிலையில், மத்திய மருத்துவ கவுன்சில்(Central Council of Indian Medicine) மாணவர் சேர்க்கைக்கான தகுதி மதிப்பெண்களில் திருத்தம் செய்துள்ளது. அதன்படி நீட் நுழைவுத்தேர்வில் பொதுப்பிரிவினர் 247 மதிப்பெண் அதாவது 35%, எஸ்.சி. எஸ்.டி, பிற்படுத்தப்பட்டோர் 210 மதிப்பெண் அதாவது 25%, மாற்றுத்திறனாளில் 229 மதிப்பெண் அதாவது 30% பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம் என திருத்தம் செய்துள்ளது.

கடலுக்குள்ள போறமே ஜாலி... ஜாலி... தவழ்ந்து செல்லும் குட்டி ஆமைகள் !


அதனடிப்படையில், செண்டாக் முதுநிலை மருத்துவ படிப்புக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இதற்காக தகுதி வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மார்ச் 18ம் தேதி வரை(www.centacpuducherry.in) என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். அதன் பிறகு சென்டாக் இணையதளத்தில் ஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்படும் என புதுச்சேரி கல்வித்துறை இயக்குனரும், சென்டாக் குழு கன்வீனருமான ரூத்ரகவுடு தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog