130 சவரன் நகை.. எலியால் குழப்பம்.. 'திருட்டு போனதா நினைச்சிட்டோம்..' போலீசை குழப்பிய தம்பதி!807558874


130 சவரன் நகை.. எலியால் குழப்பம்.. 'திருட்டு போனதா நினைச்சிட்டோம்..' போலீசை குழப்பிய தம்பதி!


சென்னை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் சரவணன். சிறுச்சேரியில் உள்ள ஐடி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி, சிறுசேரியில் உள்ள மற்றொரு ஐடி நிறுவனத்தில் பொறியாளராக உள்ளார். இந்த நிலையில், தங்கள் வீட்டில் பீரோவில் இருந்த 130 சவரன் தங்க நகைகளை நள்ளிரவில் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றதாக சரவணனும் அவரது மனைவியும் போலீசில் புகார் அளித்தனர்.

 

இதையடுத்து, எம்.ஜி.ஆர் நகர் போலீசாரும், அசோக் நகர் காவல் உதவி ஆணையரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. போலீசார் வீட்டை முழுவதுமாக சோதனை செய்து கொண்டிருந்த போது, கொள்ளையடிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட 130 சவரன் நகைகளும் பீரோவில் இருந்தது தெரியவந்தது. இதனால், ஐடி தம்பதி மீது சந்தேகமடைந்த போலீசார், இருவரிடமும் கிடுக்கு பிடி விசாரணை நடத்தினர்.

Comments

Popular posts from this blog

The Best Critical Thinking Games for Your Homeschool

FRESCA Target #Fresca

சரியாக படிக்காத அக்கா மகனை தட்டிக்கேட்ட தாய்மாமன் குத்திக்கொலை!