கோவையில் கஞ்சா சாக்லேட் விற்பனை! ஒருவர் கைது1225724132


கோவையில் கஞ்சா சாக்லேட் விற்பனை! ஒருவர் கைது


கோயம்புத்தூர்: ரத்னபுரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் மற்றும் உதவி ஆய்வாளர் கஸ்தூரி தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கண்ணப்பநகர் சங்கனூர் பகுதியில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த நபரை போலீஸ் சோதனை செய்துள்ளனர். போலீசாரின் கேள்விகளுக்கு அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.

இதனால் அந்த நபரின் வாகனத்தை போலீஸ் சோதனை செய்ததில் சாக்லேட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அந்த சாக்லெட்டுகளை சோதனை செய்ததில் அது கஞ்சா என தெரியவந்துள்ளது. உடனடியாக அந்த நபரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த நபர் பெயர் பாலாஜி என்பதும் காய்கறி மார்கெட்டில் கூலி தொழிலாளி என்பதும் தெரியவந்தது.

தொடர் விசாரணையில் பாலாஜி கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்டதும், கஞ்சா சாக்லேட் விற்பனை குழுவின் தலைவன் சுரேஷ் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் கஞ்சா சாக்லேட் விற்பனை குழுவின் தலைவர் சுரேஷ் உட்பட கூட்டாளிகள் 15 பேரை பிடித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் உத்திரப்பிரதேசத்திலிருந்து கஞ்சா சாக்லெட்டுகள் தயாரிக்கப்பட்டு கோயம்புத்தூருக்கு ரயில், லாரிகள் மூலம் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

இதற்கு முன் ஒருவர் கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுப்பட்டு கைதான நிலையில் மேலும் ஒருவர் கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுப்பட்டு கைதானது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments

Popular posts from this blog

The Best Critical Thinking Games for Your Homeschool

FRESCA Target #Fresca

சரியாக படிக்காத அக்கா மகனை தட்டிக்கேட்ட தாய்மாமன் குத்திக்கொலை!