நாகூர் கடற்கரையில் பக்ரீத் சிறப்பு தொழுகை - 1000-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு...!197527271


நாகூர் கடற்கரையில் பக்ரீத் சிறப்பு தொழுகை - 1000-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு...!


சவுதி அரேபியாவில் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடபடுவதை முன்னிட்டு, நாகூர் கடற்கரையில் ஜாக் அமைப்பினர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தியாக திருநாளான பக்ரீத் பண்டிகையின் போது ஆடு, ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகள் பலி கொடுக்கப்பட்டு, அதன் இறைச்சியை மூன்றில் ஒரு பங்காகப் பிரித்து ஏழைகளுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்து மகிழ்வர்.

நாகூரில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிப்பதாக இஸ்லாமியர்கள் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog