இப்படியுமா ஃபோட்டோ ஷூட் பண்ணுவாங்க? – வைரல் புகைப்படங்கள்!!558692787


இப்படியுமா ஃபோட்டோ ஷூட் பண்ணுவாங்க? – வைரல் புகைப்படங்கள்!!


உலகின் மிகவும் ஆபத்தான ரயிலில் புதுமணத் தம்பதி ஒன்று ஃபோட்டோஷுட் நடத்தியுள்ளது வைரலாகி வருகிறது.

குரோஷியாவைச் சேர்ந்த கிறிஸ்டிஜான் இலிசிக் (35) மற்றும் அவரது மனைவி ஆண்ட்ரியா ட்ரகோவ்செவிக் (29)  ஹனிமூன் ஃபோட்டோஷுட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பயண விரும்பிகளான இந்த தம்பதி திருமண உடையில் இந்த ஃபோட்டோஷுட்டை நடத்தியுள்ளனர். 2 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ரயிலில் 200 பெட்டிகளுக்கும் மேல் உள்ளது. அத்தனை பெட்டிகளிலும் இரும்புத்தாது துகள்கள் மட்டுமே நிரப்பப்பட்டிருக்கும்.

 

ஆப்பிரிக்காவில் உள்ள சஹாரா பாலைவனத்தின் வழியாக 700 கிலோ மீட்டர் தூரம் 20 மணிநேரம் செல்லக்கூடியது இந்த ரயில். பகலில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கும் அதிகமாகவும், இரவில் ஜீரோ டிகிரி வெப்பநிலைக்கும் கீழாக குறைந்து புழுதிகள் அடங்கிய கடுமையான பயணமாக இருக்கும்.

இந்த ரயிலில்தான் புதுமணத் தம்பதி தங்களது திருமண புகைப்படங்களை எடுத்துள்ளனர். ஆபத்தான போஸ்கள் எல்லாம் கொடுத்து அந்த தம்பதி இந்தப் புகைப்படத்தை எடுத்துள்ளனர்.

 

Comments

Popular posts from this blog

The Best Critical Thinking Games for Your Homeschool

FRESCA Target #Fresca

சரியாக படிக்காத அக்கா மகனை தட்டிக்கேட்ட தாய்மாமன் குத்திக்கொலை!