கமல்ஹாசன் சூர்யாவுக்காக சொந்த ரோலெக்ஸ் வாட்ச்சை கழட்டிக் கொடுத்த அசத்தியுள்ளார் உலகநாயகன்?2030846608


கமல்ஹாசன் சூர்யாவுக்காக சொந்த ரோலெக்ஸ் வாட்ச்சை கழட்டிக் கொடுத்த அசத்தியுள்ளார் உலகநாயகன்?


மஞ்சள் நிற தங்க நிறத்திலான ரோலெக்ஸ் வாட்ச்சின் விலை 28 லட்ச ரூபாய் என இந்தியாவில் அதன் விலைப் பட்டியல் வியக்க வைக்கிறது. இப்படியொரு காஸ்ட்லியான கை கடிகாரத்தைத் தான் விக்ரம் படத்தில் ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டிய சூர்யாவுக்கு அன்பு பரிசாக கமல் வழங்கி உள்ளார்.

நடிகர் சூர்யாவை சந்திக்க வருவதற்கு முன் நடிகர் கமலின் கையில் அதே வாட்ச் கட்டப்பட்டு இருந்த நிலையில், சூர்யாவுக்கு ரோலெக்ஸ் வாட்ச் பரிசாக அளித்த பிறகு கமலின் கை வெறுங்கையாக இருப்பதை கவனிக்க முடிகிறது. கஸ்டம் மேட் ரோலெக்ஸ் வாட்ச்சான தனது சொந்த வாட்ச்சையே அன்பு பரிசாக தனது தம்பி சூர்யாவுக்கு கமல் அளித்திருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

28 லட்சம் ரூபாய் என்றும் அதற்கு அதிகமாகவும் இதன் மதிப்பு சொல்லப்பட்டாலும், கமல் பயன்படுத்திய வாட்ச் என்பதால், தற்போது அது விலை மதிப்பற்றது என்பது நடிகர் சூர்யாவுக்கு மட்டுமின்றின் அனைவருக்கும் தெரிந்திருக்கும். விக்ரம் 3 படத்தில் மிரட்டல் வில்லனாகவே சூர்யா நடிப்பாரா அல்லது, அவர் பக்கம் ஒரு ஃபிளாஷ்பேக்கை வைத்து கடைசியில் அவரை கமல் திருத்தும் விதமாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பல வருடத்திற்கு முன் சூர்யா மற்றும் கார்த்தி கமல்ஹாசன் உடன் இணைந்து எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை ஷேர் செய்து விக்ரம், ரோலெக்ஸ், டில்லி என ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். விக்ரம் படத்தில் சூர்யாவின் ரோலெக்ஸ் என்ட்ரி மட்டுமின்றி கைதி டில்லியாக நடித்த கார்த்தியின் குரலும் ரசிகர்களுக்கு கூஸ்பம்ப்ஸ் கொடுத்தது. விக்ரம் 3ம் பாகம் உருவானால் சூர்யா, கார்த்தி மற்றும் கமல் இணைந்து நடிப்பது உறுதி.

Comments

Popular posts from this blog

The Best Critical Thinking Games for Your Homeschool

Megan Thee Stallion Swears By This 7 Cleanser for Her Sensitive Skin #Stallion

மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா படம் எப்படி இருக்கு? டிசாஸ்டர் என தெறிக்கவிடும் நெட்டிசன்கள்!