எம்மாடியோ..! வாழைப்பூவை உணவில் அடிக்கடி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா ?
எம்மாடியோ..! வாழைப்பூவை உணவில் அடிக்கடி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா ?
பாரம்பரிய உணவுகளில் இன்றுவரை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைவது வாழை சார்ந்த உணவுகள் தான். வாழையில் தண்டு, இலை, காய், பூ போன்ற ஒவ்வொரு பகுதிகளும் மருத்துவ குணங்கள் நிறைய உள்ளனர்.
இந்நிலையில் துவர்ப்பு சுவை கொண்ட வாழைப்பூ உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. சுவைக்கும் ஆரோக்கியத்திற்கும் ஏற்றதாக அமைவதால் வாழைப்பூ பொரியல், வாழைப்பூ வடை, வாழைப்பூ அடை மற்றும் வாழைப்பூ தோசை என பல விதங்களில் சமைத்து சாப்பிடுகிறோம்.
வாழைப்பூவில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. இது தவிர வைட்டமின் ஏ,பி1,சி ஆகிய உயிர் சத்துக்களும் உள்ளடங்கியுள்ளது.
வாழைப்பூவில் காயங்களை ஆற்றக்கூடியது தன்மை உள்ளதால் அறுவை சிகிச்சைக்குப் பின் உண்டாகக்கூடிய காயங்களுக்கு பெரிதும் உதவுகிறது. வாழைப்பூவை வாரம் இரண்டு முறை சமைத்து உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் கலந்திருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து வெளியேற்ற முக்கிய பங்கு வகித்துள்ளது.
ரத்த நாளங்களில் உள்ள கொழுப்புக்களை கரைப்பதில் வாழைப்பூவும் முக்கிய பங்கு வகிப்பதால் இரத்த சோகை, உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படாமல் காக்கும். ரத்தத்தில் உள்ள அதிக அளவு சர்க்கரையை கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை முக்கிய பங்கு வகுத்துள்ளது.
வயிற்றுப் புண்கள் உள்ளவர்கள் வாரம் இரண்டு முறை வாழைப்பூவை சாப்பிட்டு வருவதால் நல்ல பயன் கிடைக்கும். மூல நோய் பாதிப்பு உள்ளவர்கள் மலத்தோடு ரத்தம் வெளியேறுபவர்களுக்கு சிறந்த உணவாக வாழைப்பூ பயன்படுகிறது. பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள் மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் வலி போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக வாழைப்பூ அமைகிறது.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Related Topics:வாழைப்பூ நன்மைகள்
Click to comment
Comments
Post a Comment