மாஸ்க் அணிவது.. தடுப்பூசி செலுத்துவது கட்டாயமில்லை - தமிழக அரசு அறிவிப்பு!


மாஸ்க் அணிவது.. தடுப்பூசி செலுத்துவது கட்டாயமில்லை - தமிழக அரசு அறிவிப்பு!


தமிழ்நாட்டில் கடந்த 31 ஆம் தேதி வரை அமலில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம், தடுப்பூசி செலுத்திக் கொள்வது போன்ற நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் தவணை தடுப்பூசியை 92 சதவீதம் பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 75 சதவீதம் பேரும் செலுத்திக் கொண்டிருப்பதன் காரணமாக தமிழகம் முழுவதும் தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் மாஸ்க் அணிவது, தனிநபர் இடைவெளி ஆகியவற்றை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயமில்லை என்றும், தடுப்பூசி செலுத்தாதவர்கள் தங்கள் சுயவிருப்பத்தின் அடிப்படையில் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

The Best Critical Thinking Games for Your Homeschool

போஸ்ட் ஆபிஸில் 98,000 காலியிடங்கள்: 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் - மிஸ் பண்ணாதீங்க1730516059

மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா படம் எப்படி இருக்கு? டிசாஸ்டர் என தெறிக்கவிடும் நெட்டிசன்கள்!