கள்ளக்குறிச்சி வன்முறை வழக்கு: மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம் தொடர்பாக சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும், கைது செய்யப்பட்ட அப்பாவிகளை அடையாளம் காணக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை அடுத்து மூன்று நாட்களுக்கு பின் பள்ளியில் மிகப் பெரிய வன்முறை நடந்தது. 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த வன்முறை, தீவைப்பு சம்பவங்கள் தொடர்பாக சிறப்பு புலனாய்வு போலீசார், அப்பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். ஆனால் இவ்வழக்கில் அப்பாவிகள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்; நடந்த சம்பவம் என்ன என்பது தெரியாமலேயே கைது செய்யப்பட்டிருக்கின்றனர். வழக்கமான பணிகளுக்கு சென்றவர்கள் கூட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என அப்பகுதி பொதுமக்கள் கூறியிருந்தனர். இது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். மேலும் கிராம பொதுமக்கள் சென்னைக்கு வந்து டிஜிபி அலுவலகத்தில் இது தொடர்பாகவும் புகார் மனுவும் கொடுத்திர...