மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா படம் எப்படி இருக்கு? டிசாஸ்டர் என தெறிக்கவிடும் நெட்டிசன்கள்!
மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா படம் எப்படி இருக்கு? டிசாஸ்டர் என தெறிக்கவிடும் நெட்டிசன்கள்!
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அந்த படத்தை ஜாலியாக இயக்கிய இயக்குநர் பரசுராமுக்கு தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார் மகேஷ் பாபு. செம ஜாலியாக இந்த படம் இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தியேட்டரில் ஏமாற்றமே மிஞ்சியதாக ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
பாலிவுட்டில் நடிக்க வந்த வாய்ப்புகளை மறுத்து விட்டேன் என்றும், பாலிவுட் சினிமாவால் தனக்கான சம்பளத்தைக் கொடுக்க முடியாது என மகேஷ் பாபு பேசியது சர்ச்சையை கிளப்பிய நிலையில், சர்காரு வாரி பாட்டா படத்திற்கு #DisasterSVP ஹாஷ்டேக்கை தெலுங்கு சினிமா ரசிகர்கள் போட்டுத் தாக்கி வருகின்றனர்.
அதிக தொகைகளை பெரும் புள்ளிகளுக்கு வட்டிக்கு விட்டு அமெரிக்காவில் இருந்து சம்பாதிக்கும் மகேஷ் பாபு சரியான நேரத்தில் பணம் திரும்ப வரவில்லை என்றால் நேரடியாக வசூல் வேட்டையில் இறங்கி விடுவார். யாரையும் வச்சு பார்க்க மாட்டார். ஒரு கட்டத்தில் கீர்த்தி சுரேஷ் படிப்பு செலவுக்காக வாங்கும் பணத்தை கொடுக்காமல் விடும் நிலையில், அவருடைய அப்பாவான சமுத்திரகனியிடம் மகேஷ் பாபு பிரச்சனை பண்ண வர, மகேஷ் பாபுவுக்கும் சமுத்திரகனிக்கும் நடக்கும் மோதல் தான் கதை என்றும் இதற்கு இடையே கீர்த்தி சுரேஷ் உடன் எப்படி காதல் உருவாகிறது என்பது தான் படத்தின் கதை என நெட்டிசன்கள் ரிவீல் செய்து வருகின்றனர்.
மகேஷ் பாபுவின் படம் நல்லா இருக்கோ, இல்லையோ முதல் நாளிலாவது ஹவுஸ்ஃபுல்லாக மாறிவிடும். ஆனால், வியாழக்கிழமையான இன்று பெரிய எதிர்பார்ப்பு இல்லாத நிலையில், பல தியேட்டர்களில் கூட்டமே இல்லாமல் காத்து வாங்கி வருவதாக நெட்டிசன்கள் வீடியோக்களை வெளியிட்டு பங்கம் செய்து வருகின்றனர்.
முதல் முறையாக மகேஷ் பாபுவின் படத்தின் சிறப்பு காட்சிக்கு போதுமான டிக்கெட்டுகள் விற்காத நிலையில், ஒரு சில தியேட்டர்களில் சிறப்பு காட்சியே ரத்து செய்யப்பட்ட அவல நிலை ஏற்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் போட்டுத் தாக்கி வருகின்றனர். உரிய புரமோஷன் மற்றும் படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க எதுவுமே பண்ணாதது தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என்கின்றனர்.

ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் தங்கையாக நடித்த நிலையில், அந்த படம் கீர்த்தி சுரேஷுக்கு பெரியளவில் கை கொடுக்கவில்லை. முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காத நிலையில், மகேஷ் பாபுவின் படத்தில் கிடைத்த வாய்ப்பு கை கொடுக்கும் என எதிர்பார்த்தார். ஆனால், இந்த படம் படு தோல்வியை சந்தித்துள்ள நிலையில், கீர்த்தி சுரேஷுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் என்கின்றனர். சிரஞ்சீவியின் போலா சங்கர் (வேதாளம் ரீமேக்) படத்திலும் தங்கை வேடத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment