கொளத்தூரில் நடந்த அதிமுக உள்கட்சி தேர்தலில் அடிதடி: ஒரு கோஷ்டியை வெளியே தள்ளி கதவை மூடியதால் பரபரப்பு
சென்னை: கொளத்தூரில் நடந்த அதிமுக உள்கட்சி தேர்தலில் அடிதடி ஏற்பட்டதுடன், ஒரு தரப்பை வெளியே அனுப்பி, கதவை அடைத்து தேர்தல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கொளத்தூர், வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட அதிமுக உள்கட்சி தேர்தல், கொளத்தூர் எஸ்.ஆர்.பி.காலனி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக முன்னாள் அமைச்சர் ஜெயபால் மற்றும் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து ஆகியோர் தலைமையில் தேர்தல் நடந்தது. இதில், தற்போது மாவட்ட செயலாளராக உள்ள வெங்கடேஷ் பாபு மீண்டும் அதே பதவிக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை.
அப்போது, 30 பேருடன் அங்கு வந்த வில்லிவாக்கத்தை சேர்ந்த...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment